November 10, 2021

இதய நோய்கள் வராமல் தடுக்க இந்த உணவு மற்றும் தீநீர் சாப்பிடுங்க!


இதய நோய்கள் வராமல் தடுக்க இந்த உணவு மற்றும் தீநீர் சாப்பிடுங்க 1. இதயம் தொடர்பான நோய்கள் ஆரம்ப நிலையில் கண்டறியப்படாவிட்டால் அவை உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். எனவே ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை பெறுவதும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் அவசியம். 2. ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும் : உடலில் #எடை அதிகரித்தால் அது பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும். குறிப்பாக #இதயநோய்அபாயம் அதிகரிக்கிறது. உடல் பருமன் அதிகரித்தால் #உயர்இரத்தஅழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவுகள் மற்றும் நீரிழிவு போன்ற பிற இதய நோய் ஆபத்து காரணிகளையும் ஏற்படுத்தும். எனவே உங்கள் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது இதய நோய் ஆபத்தை குறைக்கிறது. 3. மது, புகைப்பிடிப்பதை தவிர்க்கவும் : குடிப்பழக்கம் மற்றும் புகைப்பிடித்தல் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும். அதிகமாக மது அருந்துவது உங்கள் இரத்த அழுத்தத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல் உடலில் கூடுதல் கலோரிகளையும் சேர்க்கிறது. அதேபோல புகைப்பிடிப்பதால் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது மற்றும் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே மது அருந்துவது, புகைப்பிடிப்பதை அறவே தவிர்த்து விடுவது நல்லது. 4. மன அழுத்தத்தை கட்டுப்படுத்துங்கள் : மன அழுத்தம் பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கிறது, அதில் இதய நோய்கள் முக்கியமானது. குறிப்பாக கோவிட் -19 தொற்றுநோய்களின் போது மன அழுத்தம் பெரும்பாலானோருக்கு அதிகரித்துள்ளது. மன அழுத்தம் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது மற்றும் தீவிர மன அழுத்தம் மாரடைப்பிற்கும் வழிவகுக்கும். மனஅழுத்தத்தை நிர்வகிக்க தற்போது பெரும்பாலானோர் அதிகப்படியான குடிப்பழக்கம் மற்றும் புகைபிடித்தல் ஆகியவற்றிற்கு அடிமையாகின்றனர். ஆனால் அவை உங்கள் இதயத்திற்கு மோசமானவை. எனவே தினமும் உடற்பயிற்சி செய்வது, இசை கேட்பது மற்றும் தியானம் செய்வது, செடிகள் வளர்ப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடலாம். #ShreeVarma #DrGowthaman #healingmeditation #healingmeditationwithguruji #wellnessguruji #cad #chd #heartdisorders www.shreevarma.org www.drgowthaman.com 5. சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருங்கள் : நீரிழிவு நோயாளிகளுக்கு இதய நோயால் பாதிக்கப்படும் அபாயம் இரண்டு மடங்காக உள்ளது. ஏனெனில் நீரிழிவு நோயிகளின் உயர் இரத்த சர்க்கரை இரத்த நாளங்கள் மற்றும் இதயத்தைக் கட்டுப்படுத்தும் நரம்புகளை பாதிக்கிறது. எனவே உங்கள் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு 180 எம்.ஜி-க்கு மேல் அதிகரிக்கும் பொழுது அதனை சர்க்கரை நோயாக மாறுகிறது. எனவே உங்கள் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் அன்றாடம் உடற்பயிற்சி செய்வது, முறையான டயட்டை பின்பற்றுவதும் முக்கியம். 6. போதுமான உறக்கம் : தூக்கமின்மை உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. இந்த நோய்கள் இதயத்தை மேலும் பலவீனப்படுத்த வழிவகுக்கிறது. எனவே தினமும் இரவில் 7-8 மணிநேரம் தூங்க வேண்டும். தற்போது ஏராளமானோர் செல்போன்கள், டிவி பார்த்து கொண்டே இரவில் லேட்டாக தூங்குகின்றனர். இதன் விளைவாக பல்வேறு உடல்நல கோளாறுகள் ஏற்படுகிறது. எனவே தினமும் போதுமான நேரம் தூங்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள். படுக்கைக்கு செல்வதற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன்னர் கணினி, செல்போன், டிவி பார்ப்பதை தவிர்த்து விடுங்கள்.

No comments:

Post a Comment